நேச்சுரல் ஸ்டார் என்று தெலுங்கு சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் நானி. இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான தசரா படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நானி நடிப்பில் வெளியான “ஹாய் நான்னா” திரைப்படமும் மக்களின் ஆதரவை பெற்று 70 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து ஹிட் அடித்தது.
தற்போது நடிகர் நானி, இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் “சரிபோதா சனிவாரம்” என்ற படத்தில் நடித்துள்ளார். இது நானியின் 31 வது படம். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க, எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
சமீபத்தில் இந்த படத்தின் Glimpse வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து நானியின் 32 வது படத்தை DVV என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க பிரபல தெலுங்கு இயக்குநர் சுஜித் இயக்குவார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நானியின் 33 வது படம் குறித்த அப்டேட்டும் வெளியாகி இருக்கிறது.
தசரா படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா (Srikanth Odela) நானி 33 படத்தை இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தசரா படம் வெளியாகி இன்றுடன் (மார்ச் 30) ஓராண்டு நிறைவானதை ஒட்டி இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.
மக்கள் கூட்டம் அலைமோதுவதில் நானியின் முகம் தெரிவது போல வடிவமைக்கப்பட்டிருக்கும் போஸ்டரில் முறுக்கு மீசை, பீடி, கருப்பு கண்ணாடி என நானியின் ஸ்டைலான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
மேலும் அந்த போஸ்டரில் “You don’t need an Identity to become a Leader” என்ற வாக்கியமும் இடம்பெற்றுள்ளது.
Dasara turns one year today. On this occasion ..#Nani33
A Srikanth Odela MADNESS again. pic.twitter.com/RuNp8ljNVo— Nani (@NameisNani) March 30, 2024
தசரா படத்தை தயாரித்த சுதாகர் செருக்குரி (Sudhakar Cherukuri) அவர்கள் தான் நானி 33 படத்தையும் தயாரிக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பே தசரா 2 படத்திற்காக ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மீண்டும் நானி நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.
நானி 33 படம் தசரா 2 ஆக இருக்கப் போகிறதா அல்லது வேறு ஒரு புதிய படமாக இருக்கப்போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
கூடிய விரைவில் நானி 33 படத்தின் டைட்டில் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
’போற போக்கில் உதவி செய்தவர்’ : டேனியல் பாலாஜி குறித்து பெண் இயக்குநர் உருக்கம்!
வடசென்னைக்கு என்னென்ன செய்தேன்? : பட்டியல் போடும் கலாநிதி வீராசாமி