இஸ்ரோவின் புகழ் பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன்,நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதள ரகசியங்களை 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்றதாக கைது செய்யப்பட்டு கடும் சித்தரவதைகளுக்கு உள்ளானவர் விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணன்.
இவரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு என நடிகர் மாதவனே நடித்து படத்தை இயக்கி தமிழ், ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த படத்தின் ரியல் ஹீரோவான நம்பி நாராயணன், படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விஜய் மூலனுடன் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள ரஜினி இல்லத்திற்கு சென்று இன்று (ஜூலை 30) ரஜினியை சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்த நெகிழ்ச்சியான அனுபவத்தை படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விஜய் மூலன் அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- க.சீனிவாசன்