எஸ். இசக்கி துரை தயாரிப்பில், வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்‘.
படத்தின் டிரைலர் ஏப்ரல் 15 அன்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
உலகில் எல்லைகள் தோன்றியது ஏன்? போர்கள் ஏன்? அகதிகள் ஏன்? என்ற அடையாளமற்ற இனத்தை உருவாக்கியது யார்? என்று பல கேள்விகளை திரைப்படத்தின் மூலம் எழுப்பியிருக்கிறார் இயக்குநர் ரோகாந்த்.
சென்னையில் நேற்று மாலை நடைபெற்ற சிறப்பு காட்சியில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ திரைப்படத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் நல்லகண்ணு மற்றும் மகேந்திரன், மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி ஆகியோர் கண்டு ரசித்தனர்.
படத்தை பார்த்த நல்லக்கண்ணு, “யாதும் ஊரே யாவரும் கேளிர்” படம் தமிழ் மக்களின் பெருமை. விஜய் சேதுபதி நல்ல முயற்சி மேற்கொண்டுள்ளார். படக்குழுவினருக்கு எனது பாராட்டுக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இராமானுஜம்
ஜல்லிக்கட்டு தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் நடந்தது என்ன?
பட்டாசு ஆலை விபத்து: முதல்வர் நிதியுதவி!