தெலுங்கு சினிமா உலகில் அடுத்த பிரம்மாண்ட திருமணமாக நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபாலா இடையே டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இருவரும் டேட்டிங்கில் இருந்து வந்த நிலையில் நாளை இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.
முன்னதாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோர் காதலித்து திருமணம் செய்து, பின்னர் பரஸ்பரம் பிரிந்தனர். நாளை நடைபெற உள்ள நாக சைதன்யாவின் திருமணம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருமணத்தை முன்னிட்டு தனது மகன் நாகசைதன்யாவுக்கு பரிசாக கொடுப்பதற்காக 2.5 கோடி மதிப்புள்ள லக்ஸஸ் எல்.எம். எம்.பி.வி காரை நாகர்ஜூனா வாங்கியுள்ளார். மெருண் வண்ணத்திலான இந்த காரை நாகர்ஜூனாவே ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு ஓட்டி வந்து பதிவு செய்தார். 7 சீட்டர் கொண்ட இந்த கார் எலக்ட்ரிக் ரகத்தை சேர்ந்தது. இந்த காரின் அடிப்படை விலை 2.1 கோடி ஆகும்.
நாகர்ஜூனாவிடத்தில் ஏராளமான கார்கள் உள்ளன. ஏற்கனவே, அவரிடத்தில் கியா EV6, பி.எம்.டபிள்யூ 7-சீரிஸ் ஆடி ஏ 7, பி.எம். டபிள்யூ எம் 6, டொயட்டோ வெல்ஃபயர் , நிஸ்ஸான் ஜி.டி.ஆர் ரேஞ்ச் ரோவர் மற்றும் மெர்சிடெஸ் பென்ஸ் எஸ் 450 போன்ற கார்கள் உள்ளன.
இதற்கிடையே, நாகசைதன்யா கூறுகையில்,திருமணத்திற்கு பின்னரும் சோபிதா தொடர்ந்து படங்களில் நடிப்பார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நிச்சயம் அவர் படங்களில் தொடர்வார்.
சோபிதாவின் குடும்பம் தெலுங்கு பாரம்பரிய கலாச்சாரத்தை மிகவும் பின்பற்றுகிறது. என்னை அவர்களது மகனைப் போல் பார்த்துக் கொள்கிறார்கள். அந்த குடும்பத்துடன் நான் நல்ல சவுகரியமாக உணர்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்
பெட்ரோல், எலக்ட்ரிக், சோலார் மூன்றிலும் ஓடும் ஜீப்… விலை 80 ஆயிரம்தான்!வெள்ள பாதிப்பு நிவாரணம்: முழு விவரம்!