‘யாவரும் நலம்’, ’24’, ‘கேங் லீடர்’ போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் விக்ரம் குமார். தற்போது இவரது இயக்கத்தில் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள புதிய வெப் சீரிஸ் ‘தூதா’. இந்த வெப் சீரிஸ் அமேசான் ஒரிஜினல் ஆக வெளியாக உள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் வெளியாக உள்ள இந்த சீரிஸில் நாக சைதன்யாவுடன் பார்வதி திருவோத்து, பிரியா பவானி சங்கர், ப்ரச்சி தேசாய், தருண் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
மிஸ்டரி த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள தூதா வெப் சீரிஸ் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வரும் டிசம்பர் 1 தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸ் தேதி குறித்த புது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
mystery or message? you’ll find out soon enough 👀#DhoothaOnPrime, Dec 1 pic.twitter.com/7vNbKk6Aih
— prime video IN (@PrimeVideoIN) November 15, 2023
கடைசியாக இயக்குனர் விக்ரம் குமார் – நடிகர் நாக சைதன்யா கூட்டணியில் வெளியான ‘தங்யூ’ படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால் தற்போது இவர்களது கூட்டணியில் உருவாகியுள்ள இந்த தூதா வெப் சீரிஸ் நிச்சயமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ’தூதா’ நாக சைதன்யாவின் முதல் வெப் சீரிஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
பயிர் காப்பீடு: ஸ்டாலினுக்கு எடப்பாடி வலியுறுத்தல்!
IND vs NZ: இந்தியாவுக்கு சாதகமாக பிட்ச் மாற்றப்பட்டதா? – பரபரப்பு புகார்!