தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் நாக சைதன்யா.
பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனான இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ஜோஸ் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
அதன் பிறகு தனக்கு ஏற்ற கதைகளை தேர்வு செய்து நடித்து பல வெற்றிகளை கொடுத்த நாக சைதன்யா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.
2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2021 ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.
அதன் பிறகு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நாக சைதன்யா தற்போது 3.51 கோடி ரூபாய் மதிப்புள்ள Porsche 911 GT3 RS என்ற புதிய காரை வாங்கி இருக்கிறார்.
ரேஸ் காரை போல் பார்ப்பதற்கே செம ஸ்டைலாக இருக்கும் இந்த சொகுசு காருடன் நாக சைதன்யா எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கார்கள் மீது அதிகம் ஆர்வம் உள்ள நடிகர் நாக சைதன்யாவிடம் பெராரி, பிஎம்டபிள்யூ என பல சொகுசு கார்களின் சேகரிப்பு உள்ளது.
அந்த வரிசையில் இந்த புதிய சொகுசு காரும் இணைந்து விட்டது.
நாக சைதன்யா நடிப்பில் வெளியான தேங்க் யூ, கஸ்டடி ஆகிய இரண்டு படங்களும் எதிர்பார்த்த வெற்றியை தராத நிலையில்,
அடுத்ததாக “தண்டெல்” (Thandel) என்ற திரைப்படத்தில் ஒரு மீனவ சமூகத்தை சேர்ந்த இளைஞராக நாக சைதன்யா நடித்து வருகிறார்.
சந்து மொண்டேடி இயக்கும் இந்த படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார்.
இந்த படம் நாக சைதன்யாவிற்கு நிச்சயமாக வெற்றியை தேடி தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
KKR vs SRH: முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா
நுழைவுத் தேர்வில் மோசடி: எய்ம்ஸ் மருத்துவர்கள் கைது!
டாப் 10 செய்திகள் : காற்றழுத்த தாழ்வு பகுதி முதல் மோடி பிரச்சாரம் வரை!
பியூட்டி டிப்ஸ்: மாறிவரும் பருவநிலைக்கேற்ப உங்களை அழகாக்கிக் கொள்வது எப்படி?