நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை திருமணம் செய்தார். 4 ஆண்டுகளுக்கு பிறகு பிரிந்தனர். இப்போது, நாகசைதன்யா நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார். சமந்தா இன்னும் திருமணம் செய்யாமல் தனியாக வசிக்கிறார்.
சமீபத்தில் Raw Talks with VK Podcast என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் நாக சைதன்யா, சமந்தாவுடனான விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசினார்.
அப்போது, அவர் கூறியதாவது, “தனிப்பட்ட காரணங்களுக்காக பிரிந்து செல்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. சமந்தாவுக்கு வேறு நோக்கம் இருந்தது. இது பரஸ்பர முடிவு . நானும் சமந்தாவும் பிரிவதற்கு முன் பின்விளைவுகளை கவனமாக பரிசீலித்தேன். இது எனக்கு ஒரே இரவில் நடக்கவில்லை, என்றாலும் எல்லாமே ஒரு காரணத்திற்காக நடந்தது. அதற்காக நான் வருத்தப்படுகிறேன்.
இருவரும் விவாகரத்தை தாண்டி, வாழ்க்கையில் முன்னேறி வந்தாலும், ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். இதுபோன்ற முடிவுகளை எடுப்பதற்கு முன், கவனமாக சிந்தித்தேன். ஏனென்றால், எங்கள் குடும்பத்தில் இதற்கு முன்பும் விவாகரத்துகள் நடந்துள்ளன. அது என் வீட்டு கதவை தட்டிய போது, உணர்வுப்பூர்வமாக சிந்தித்தேன்.
நாங்கள் சொந்த காரணங்களுக்காக, எங்கள் வழியில் செல்ல விரும்பியதால் இந்த முடிவை எடுத்தோம். இப்போது, அவரவர் சொந்த வழியில் செல்கிறோம். எங்கள் பிரிவு குறித்து இன்னும் என்ன விளக்கம் தேவை என்று எனக்கு புரியவில்லை. எங்கள் சொந்த வாழ்க்கையை அறிந்து கொள்ள மீடியாக்கள் இரவும் பகலும் துடித்தன.
எனக்கு மீண்டும் கிடைத்த காதலால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சமந்தாவுடனான எனது உறவை மக்கள் மரியாதையுடன் பார்க்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.