நடிகர் நாக சைதன்யாவுக்கும், நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் 4 ஆண்டுகளில் 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். ஆனால் இன்னும் சட்டப்படி விவாகரத்து பெறவில்லை.
எனினும் சில பேட்டிகளில் இருவருமே ஒருவரை ஒருவர் பற்றி பேசி வருகின்றனர்.
சமீபத்தில் சமந்தா அளித்த நேர்காணல் ஒன்றில், நாக சைத்தன்யா முதல் மனைவியாக யாரை கருதினார் என்று கிண்டலாக கூறியிருந்தார்.
சைதன்யா அவரது தலையணையை தான் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அதுதான் அவரது முதல் மனைவி. எங்களுக்கு இடையே எப்போதும் தலையணை இருந்தது என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் என்று கூறப்படுகிறது.
சைதன்யாவும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கள் பரவின.
இருவரும் லண்டன் ஹோட்டலில் ஒன்றாக இருந்த புகைப்படம் இணையத்தில் கசிந்து பேசு பொருளானது.
இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் இல்லத்தில் இருவருக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாகவும், இதில் இருவீட்டார் மட்டும் கலந்து கொள்வதாகவும் தகவல்கள் வருகின்றன.
இந்த தகவலை நாக சைதன்யாவோ, சோபிதாவோ உறுதிப்படுத்தாத நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனா திருமணம் குறித்த தகவலை அறிவிப்பார் எனவும் சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வெறும் 1 கிலோ வித்தியாசத்தில் பதக்கத்தை தவறவிட்ட ‘மீராபாய் சானு’