”எங்க அப்பத்தா” நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு குரல்!

Published On:

| By Monisha

வைகை புயல் வடிவேலு நடித்து வரும் நாய் சேகர் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

வடிவேலுவின் நாய் சேகர் கதாபாத்திரத்தை மையமாக வைத்து சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். லைகா புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் நகைச்சுவை நடிகர் ரெட்டின் கிங்ஸ்லி, விஜய் டிவி சிவாங்கி, நடிகர் ஆனந்தராஜ், ஷிவானி நாராயணன் மற்றும் விஜே விக்னேஷ் காந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு படம் எப்போது திரைக்கு வரும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனலாம்.

தனித்துவமான நடிகராக மட்டுமில்லாமல் வடிவேலு நல்ல பாடகராகத் தனது குரலில் பல பாடல்களையும் பாடியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு தனது குரலில் நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் ”அப்பத்தா” என்ற பாடலை பாடியுள்ளது இந்த படத்திற்குக் கூடுதல் சிறப்பாகவும் அமைந்துள்ளது.

இந்த பாடல் இன்று (நவம்பர் 14) வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி முதல் பாடலை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பாடல் முழுவதும் செட் அமைத்து எடுக்கப்பட்டுள்ளது. வடிவேலுவின் லுக் பயங்கர மாஸாக இருக்கிறது. நகைச்சுவை நடிகராகவும் மாஸ் கதாநாயகனாகவும் இந்த பாடலில் வடிவேலு தன்னை பதிவு செய்துள்ளார்.

என்னதான் மாஸ் லுக்கில் வந்தாலும் அவருக்கே உரிய பாணியில் நகைச்சுவையாகவும் அசத்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த பாடல் வெளியான சில நொடிகளிலேயே ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுவிட்டது.

விவேக் எழுதிய இந்த பாடலுக்குப் பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

ஆளுநர் பேசுவதை அவரது வீட்டிலேயே கேட்க மாட்டார்கள்: டிடிவி தினகரன்

நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel