வெளியாகி 24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது லியோ படத்தின் ’நா ரெடி’ பாடல்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் லியோ. இந்த படத்தில் சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன்,மன்சூர் அலிகான், மிஷ்கின், த்ரிஷா , ப்ரியா ஆனந்த் ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் இப்படத்தின் முதல் பாடலின் லிரிக் வீடியோ நேற்று(ஜூன் 23) வெளியானது.
விஷ்ணு எடவன் எழுதியுள்ள இந்தப் பாடலை நடிகர் விஜய்யுடன் இணைந்து அனிருத் மற்றும் அசல் கோளாறு ஆகியோர் பாடியுள்ளனர்.
இந்த பாடல் நேற்று முதல் வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், வெளியான சில நிமிடங்களிலேயே 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து ‘நா ரெடி’ பாடல் 10 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.
இந்நிலையில், வெளியாகி 24 மணி நேரத்தில் ‘நா ரெடி’ பாடல் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இதை சோனி மியூசிக் சவுத் நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும், இந்த பாடல் இன்ஸ்டாகிராமில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரீல்ஸ் வீடியோக்களாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் சோனி மியூசிக் சவுத் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்த இளம் வீரர்கள்!
ஜூன் 28 ஆஜர்படுத்தப்படுகிறாரா செந்தில் பாலாஜி?