மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் சைக்கோ. அந்த படத்திற்கு பின் பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி இருந்தார். ஆனால் இன்று வரை அந்த படம் வெளியாக வில்லை.
அதன் பிறகு இயக்குனர் மிஷ்கின் நடிகராக அவதாரம் எடுத்து பல படங்களில் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் விஜய்யின் லியோ படத்திலும் கூட மிஷ்கின் நடித்திருந்தார்.
தற்போது மிஷ்கின் ஓர் புதிய படத்தை இயக்கயுள்ளார் என்று தகவல் வெளியானது. அந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் மலையாள நடிகர் ஜெயராம் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்பட்டது.
மேலும் விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் அந்த படத்திற்கு “ட்ரெயின்” என்று டைட்டில் வைக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில் அந்த தகவலை உறுதி செய்யும் வகையில் தற்போது விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் ட்ரெயின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க ஓடும் ரயிலில் நடக்கும் ஒரு திரில்லர் திரைப்படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.
தற்போது ட்ரெயின் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொடர்ந்து உயரும் பூண்டு விலை: காரணம் என்ன?
பியூட்டி டிப்ஸ்: பெர்ஃப்யூம், டியோடரண்ட்… வியர்வை வாடையை விரட்ட எது பெஸ்ட்?
ஞானவேல் ராஜாவின் வார்த்தைகள் பொய்யானது: சேரன் குற்றச்சாட்டு!
கிச்சன் கீர்த்தனா: வெஜ் – ஹெல்த் சூப்