இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜயின் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் லியோ.
லியோ படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடும் விதத்தில் லியோ படத்தின் வெற்றி விழா இன்று (நவம்பர் 1) சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை திரிஷா, நடிகை மடோனா செபாஸ்டின், இயக்குனர் ரத்ன குமார், நடிகர் அர்ஜுன், நடிகரும் இயக்குனருமான மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான் உட்பட லியோ படக்குழு அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்த வெற்றி விழா மேடையில் பேசிய மிஷ்கின், “என் வாழ்வில் நான் கேள்விப்பட்ட இரண்டு லெஜண்டுகள் மைக்கேல் ஜாக்சனும் ப்ரூஸ் லீயும் தான். ஆனால் நான் நேரில் கண்ணால் பார்த்த லெஜண்ட் என்றால் அது விஜய் தான்” என்று நடிகர் விஜய்யை புகழ்ந்து தனது அன்பை வெளிப்படுத்தினார் மிஷ்கின்.
மேலும் விழா மேடையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், “நைட்டு 1 மணிக்கு போன் பண்ணி பிளாஷ்பேக்ல ஏன் பொய் சொன்னீங்கனு கனடால இருந்து கேட்குறாங்க..” என்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் லியோ படத்தின் பிளாஷ்பேக் சீன் குறித்து நகைச்சுவையாக தனது ஸ்டைலில் நடிகர் மன்சூர் அலிகான் பேசினார்.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
அக்கா சொன்ன தெறி காமெடி: அப்டேட் குமாரு
அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு: ஆவணங்கள் ஒப்படைப்பு!