மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் மாவீரன். இந்த படத்தில் அதிதி, மிஷ்கின் மற்றும் சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜூலை 14 ஆம் தேதி இந்த படம் திரைக்குவர உள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், இன்று(ஜூலை 10)சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,
”மாவீரன் திரைப்படம் வெளியான பிறகு இயக்குநர் மிஷ்கினுக்கு படம் இயக்குவதற்கு இனி நேரமே கிடைக்காது” என்று கூறியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில் , “மிஷ்கின் அளவிற்கு சினிமாவில் என்னை யாரும் இந்த அளவிற்கு கொஞ்சி இருப்பார்களா என்று தெரியவில்லை. அவ்வளவு அன்பை கொடுத்து இருக்கிறார் அவர்.
எனக்கு மிஷ்கினுடைய படங்கள் ரொம்ப பிடிக்கும். அவருடைய இயக்கத்தில் வெளியாகும் படங்களை நான் முதல் நாளே பார்த்து விடுவேன்.
நான் மிஷ்கினை பேட்டிகளில் பார்க்கும் பொழுது அவருடைய தோரணையை பார்த்து அவருடன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். ஆனால் அவர் மிகவும் இனிமையானவர்.
அவர் எவ்வளவு பெரிய அறிவாளி என்பது தெரியும் ஆனால் அதை அவர் காட்டிகொள்ளவே மாட்டார். மிஷ்கினுடன் வேலை செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நாங்கள் நடித்து கொண்டு தான் இருக்கிறோம். எத்தனை டேக் எடுத்தாலும் அது எங்களுக்கு பழகி விட்டது.
ஆனால் நீங்கள் ஒரு இயக்குநராக இருந்து கொண்டு இந்த படத்தில் சண்டைக்காட்சிகள் மற்றும் இரவு நேர படபிடிப்பில் ஆர்வமுடன் கலந்து கொண்டது எங்களுக்கு உற்சாகமாக இருந்தது.
எந்த அளவிற்கு இயக்குநராக மிஷ்கின் இருந்தாரோ அந்த அளவிற்கு தற்போது நடிகனாக இருக்கிறார்.
இந்த படத்தை பார்த்த பின் எனக்கு தோன்றியது என்னவென்றால் இனிமேல் மிஷ்கினுக்கு படம் இயக்குவதற்கு நேரம் கிடைக்காது அந்த அளவிற்கு இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்” என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்றின் சிறந்த அணி: ஐசிசி அறிவிப்பு!
300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை!