நடிகை திரிஷாவும் விஜய்யும் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்துக்காக தனியாக விமானத்தில் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்,நடிகை திரிஷா தற்போது தாய்லாந்து சென்றுள்ளார்.
அங்குள்ள புகழ் பெற்ற பாட்டயா பீச்சில் ஷார்ட் போட்டுக் கொண்டு ஜாலியாக ஒரு போஸ்ட் இன்ஸ்டாவில் பதிந்துள்ளார்.
அதில், ‘நான் எந்த நாடு அல்லது நகரத்துக்கு சென்றாலும் அந்த நாட்டுடன் காதல் கொண்டிருப்பேன். எனது ஆத்மா ஒரே இடத்தில் இருக்காது. தொடர்ந்து, பயணித்து கொண்டே இருக்கும் ‘என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 41 வயதான திரிஷா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால், தனது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி திரிஷா மறைமுகமாக உணர்த்துகிறாரா என்று நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர். முன்னதாக ஒரு பதிவில் அமைதி, பொறுமை, நம்பிக்கை மட்டுமே தன்னை வழி நடத்துவதாக நடிகை திரிஷா குறிப்பிட்டிருந்தார்.
நடிகை திரிஷா டிராவல் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் மொராக்கோ நாட்டுக்கும் அவர் சென்று வந்தார். அங்கே எடுத்த புகைப்படங்களையும் திரிஷா இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
தற்போது, தமிழிலில் தக் லைப், விடா முயற்சி,குட் பேட் அக்லி ஆகிய படங்களில் திரிஷா நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம், டொவினா தாமசுடன் ஐடென்டி ஆகிய படங்களில் திரிஷா நடித்து கொண்டிருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–எம்.குமரேசன்