பாலிவுட் உலகில் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக பேசப்படும் விஷயங்களில் ஒன்று ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என்பதுதான். இது வதந்தி என்று கூறப்பட்டாலும் தொடர்ந்து அந்த கிசுகிசு பரவியே வருகிறது. இந்தச் சூழலில் கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சல்மான் கானுடனான காதல் முறிந்த பிறகு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா. இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். பல வருடங்களாக இரண்டு பேரும் காதலோடும் அன்போடும் வாழ்ந்து வருகின்றனர். மேலும் பாலிவுட்டின் சூப்பர் ஜோடி என்ற பெயரும் இவர்களுக்கு உண்டு. ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. இப்போது, வேறு விதத்தில் இருவரும் பேசப்படுகின்றனர்.
அதாவது, அபிஷேக் பச்சனுக்கு நிம்ரத் கவுர் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தாஸ்வி என்ற படத்தில் நடித்த போது, இருவருக்கும் காதல் மலர்ந்ததாக சொல்லப்பட்டது. இந்த தகவலை நிம்ரத் கவுர் ஏற்கனவே மறுத்திருந்தார்.
இந்நிலையில் நடிகை நிம்ரத்துக்கு அமிதாப் பச்சன் எழுதிய கடிதம் ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. அந்தக் கடிதத்தில், “நாம் அதிகமாக பேசிக்கொண்டதோ பழகிக்கொண்டதோ இல்லை. ஆனால் தஸ்வி படத்தில் உங்களின் நடிப்பு அபாரமாக இருந்தது” என்று அமிதாப் கூறியுள்ளார். தஸ்வி படத்தில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கடிதம் 2022ஆம் ஆண்டு எழுதப்பட்டது.
இந்த கடிதத்தை நிம்ரத் கவுர் தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதுவும், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யப் போவதாக வதந்தி பரவ முக்கிய காரணமாக அமைந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
எதற்கெடுத்தாலும் தூக்கு போடும் ஈரானில் இப்படி ஒரு சம்பவமா? உயிருக்கு பயம் இல்லையா?
’நான் நலமுடன் இருக்கிறேன்’ : வீடியோவில் மருத்துவர் பாலாஜி