4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் சத்யராஜ் மனைவி… என்ன நடந்தது?

சினிமா

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து இப்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக பல படங்களில் நடித்து செம ஹிட் கொடுத்தவர். அவரது நடிப்புக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு.

பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில், நடிகர் சத்யராஜின் மனைவி கடந்த நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக,  மகள் திவ்யா இன்ஸ்டா பக்கத்தில்  உருக்கமாக தெரிவித்துள்ளார்.

“என் அம்மா கடந்த 4 வருடங்களாக கோமாவில் இருக்கிறார். அவர் எங்கள் வீட்டில் தான் இருக்கிறார். PEG டியூப் வழியாக தான் உணவு கொடுக்கிறோம். நாங்கள் மொத்தமாக உடைந்துவிட்டோம், ஆனாலும் அவர் குணமடைவார் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.

அம்மா திரும்ப கிடைப்பார் என எங்களுக்கு தெரியும்.  அப்பா கடந்த 4 வருடங்களாக எனக்கு தாயும் தந்தையுமாக இருக்கிறார். அப்பாவின் அம்மா கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அப்பாவும் நானும் POWERFUL SINGLE MOMS CLUB- ல் இருக்கிறோம்” என்று திவ்யா கூறியுள்ளார்.

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக கோமா ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. தங்கள் வீட்டுக்குள் இப்படி ஒரு சோகம் நடந்திருப்பது குறித்து நடிகர் சத்யராஜ் வெளிக்காட்டிக் கொண்டதில்லை.

சத்யராஜுக்கு மகேஸ்வரியுடன் 1979-ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு திவ்யா என்ற மகளும் சிபிராஜ் என்ற மகனும் உள்ளனர்.  சிபிராஜ் சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மகள் திவ்யா , ஊட்டச்சத்து நிபுணராவார். இவர் மகிழ்மதி என்ற ஒரு இயக்கத்தை நடத்தி அதன் மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவை வழங்கி வருகிறார். ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.  விரைவில் கட்சி ஒன்றில் இணைந்து பணியாற்றப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 “வானம் இடிந்து விழுந்துவிடாது” : TNUSRB தலைவர் நியமனத்துக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

ஓபிசி மக்களை காங்கிரஸ் பிளவுபடுத்துகிறதா? – மோடியை சாடிய ஜெய்ராம் ரமேஷ்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *