Aadujeevitham: படம் எப்படி இருக்கிறது?… வெளியான முதல் விமர்சனம்!

சினிமா

‘ஆடு ஜீவிதம்’ படம் எப்படி இருக்கிறது என விமர்சகர் ஒருவர் ட்வீட் செய்துள்ளார். தற்போது அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரித்விராஜ் சுகுமாரன், அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் வருகின்ற மார்ச் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம்,  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில் சுரேஷ் என்னும் விமர்சகர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் படம் குறித்த தன்னுடைய விமர்சனத்தினை பகிர்ந்து கொண்டுள்ளார். அவரின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

படம் குறித்து அவர், ”ஆடு ஜீவிதம் எனும் அற்புதமான படத்தினை பார்த்தேன். விஷுவல் காட்சிகள் பிரமாதமாக உள்ளன.

சத்தமின்றி திருமணம் முடித்த ‘ஆடுகளம்’ நடிகை

நடிகர் பிரித்விராஜ், உங்களது அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பிற்கு என்னுடைய பாராட்டுகள். அற்புதமான பின்னணி இசையுடன் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் உயிர் கொடுத்துள்ளார்.

இந்த உண்மை கதையை செல்லுலாய்டில் கொண்டு வந்ததற்காக இயக்குநர் பிளஸ்ஸிக்கு மிக்க நன்றி. ஒளிப்பதிவு இணையற்றதாக உள்ளது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்”, என பாராட்டி இருக்கிறார்.

இது மட்டுமின்றி திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே ‘ஆடுஜீவிதம்’ படம் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளது. அதாவது நேற்று நிலவரப்படி (மார்ச் 24) இப்படத்தின் 1.௦5 லட்சம்  டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்துள்ளன.

அது இப்படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பினை வெளிச்சம் போட்டுக்காட்டி இருக்கிறது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ‘ஆடு ஜீவிதம்’ நாவலை, அதே பெயரிலேயே பிளஸ்ஸி படமாக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

காலியாகும் ஓ.பி.எஸ் கூடாரம்!

IPL 2024: மொத்த அட்டவணை வெளியானது… சென்னை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது!

அண்ணாமலை, எல்.முருகன் சாலை மறியல்… வருத்தம் தெரிவித்த எஸ்.பி: நீலகிரியில் நடந்தது என்ன?

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *