சமூக வலைதளத்தில் பொதுவான, சமூகம் சார்ந்த பிரச்சினைகளில் கருத்து சொல்வதில் ஆர்வம் காட்டாதவர் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா.
கடந்த இரண்டு நாட்களாக சர்வதேச விளையாட்டு அரங்கில் விவாதத்தையும், இந்திய மக்களிடம் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி இருக்கும் இந்திய மல்யுத்த போட்டியாளர் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் 33வது ஒலிம்பிக் போட்டியில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மகளிருக்கான மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற்றார். அவரது உடல் எடை 100 கிராம் கூடுதலாக இருந்தது என காரணம் கூறப்பட்டு, இறுதிப் போட்டியில் பங்கேற்க விடாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த முடிவை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையீடு செய்துள்ளார். வினேஷ் போகத்திற்கு ஆதரவு, ஆறுதல் தெரிவித்து அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் , கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வினேஷ் போகத்தை ஆதரித்து வெளியிட்டுள்ள பதிவில்,
“வினேஷ் போகத் வென்றார்… ஆம்,மில்லியன் கணக்கான இதயங்களை வென்றுள்ளார். கடினமான நேரங்கள் வலிமையான மனிதர்களை உருவாக்குகின்றன. நீங்கள் தனியாக இல்லை. எது வந்தாலும் நாங்கள் அனைவரும் உங்களுடன் நிற்கிறோம். உறுதியாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இராமானுஜம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உயர்நீதிமன்ற வளாகத்தில் நாய்கள் தொல்லை: நீதிபதிகள் வேதனை!
ஹெல்த் டிப்ஸ்: முட்டி வலிக்கு எளிய தீர்வு!
டாப் 10 நியூஸ்: தமிழ்ப் புதல்வன் திட்டம் துவக்கம் முதல் ‘அந்தகன்’ ரிலீஸ் வரை!
பியூட்டி டிப்ஸ்: தோற்றத்தை மாற்றும் வெண் புள்ளிகள்… தடுப்பது எப்படி?