பாணா காத்தாடி, பரதேசி, ஈட்டி, கணிதன், 100 என பல வெற்றி படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் அதர்வா.
கடைசியாக அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், Trigger, பட்டத்து அரசன் ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை.
அதன் பிறகு அதர்வா நடிப்பில் வெளியான மத்தகம் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி அதர்வாவின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.
அடுத்ததாக அதர்வா நடிப்பில் ‘டிஎன்ஏ’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
தற்போது அதர்வாவின் புதிய படம் குறித்த ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில் நடிகர் அதர்வா ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும், பிரேமலு படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் ஆக மாறி உள்ள நடிகை மமிதா பைஜூ இந்த படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதில் மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால் பிரபல இசையமைப்பாளர் தமன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடித்த தமன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிகராக களமிறங்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.
நடிகர் அதர்வா நடிப்பில் அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று ஆகிய திரைப்படங்கள் அடுத்தது வெளியாக உள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 அபராதம்!
சென்னையில் அதிகரித்து வரும் மின் தேவை: தவிர்ப்பது எப்படி?
வேலைவாய்ப்பு : சென்னை ஐஐடியில் பணி!
ஹெல்த் டிப்ஸ்: மகிழ்ச்சியாகத் தூங்கச் செல்லுங்கள், உங்களின் இறப்பு தள்ளி வைக்கப்படும்!