உதவி கேட்ட நபர்: ஜிவி பிரகாஷ் சொன்ன பதில்

சினிமா

கல்லூரி கட்டணம் செலுத்த உதவி கேட்ட நபருக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் உதவி செய்துள்ளார்.

கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாத்தி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான நாடோடி மான் பாடலை வெளியிட்டார்.

அந்த பதிவில் தனுஷ் அண்ணா என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், “அண்ணா எனக்கு செமஸ்டர் கட்டணம் செலுத்த 10 ஆயிரம் தேவைப்படுகிறது. உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். கடந்த ஒரு வாரமாக தான் வீட்டில் இருக்கிறேன்.

மருத்துவர்கள் எதுவும் வேலை செய்யக்கூடாது என்று கூறியிருக்கிறார்கள். ஆபரேஷன் செய்யவே கடன் வாங்கி தான் செலவு செய்தோம். எங்கள் வீட்டில் நான் மட்டும் தான் வேலைக்கு செல்கிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்.” என்று கேட்டிருந்தார்.

அவருக்கு பதிலளித்த நடிகர் ஜிவி பிரகாஷ், “பணம் உங்களுடைய ஜிபே-க்கு அனுப்பப்பட்டுள்ளது. நன்றாக படியுங்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

ஜிவி பிரகாஷ் பணம் அனுப்பியதற்கு அந்த நபர் நன்றி கூறியுள்ளார்.

ஜிவி பிரகாஷ் மாணவர்களுக்கு உதவி செய்வது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக சில மாணவர்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்தவும் மற்றும் ஆபரேஷன் செய்யவும் ஜிவி பிரகாஷ் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

விமர்சித்த ரசிகர்: அஸ்வின் பதிலடி!

ஐஏஎஸ் அதிகாரி கார் விபத்து: லிப்ட் கொடுத்த எம்.எல்.ஏ

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *