நடிகர் விவேக்கை இழந்தது வருத்தமளிக்கிறது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா ரசிகர்களை தனது தனித்துவமான நகைச்சுவை பாணியால் கவர்ந்தவர் விவேக். இவர் தனது படங்களில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவு கருத்துகளை தொடர்ந்து பேசி வந்தார்.
90-களின் தொடக்கத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகர் விவேக், முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய்காந்த், அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார். புது புது அர்த்தங்கள், ஒரு வீடு இரு வாசல், காதல் மன்னன், உன்னை தேடி என 200-க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு விவேக் உயிரிழந்தார்.
அவ்வப்போது இணையதளங்களில் விவேக் காமெடிகள் வைரலாவது உண்டு. அந்தவகையில் தீபன் என்ற ட்விட்டர் பயனர் நடிகர் விவேக் விஜயகாந்துடன் நடித்த காட்சியை பகிர்ந்துள்ளார். அதில் நடிகர் விஜயகாந்த் தமிழ் மொழியின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து பேசும் பஞ்ச் டயலாக் இடம்பெற்றுள்ளது.
அவரது ட்வீட்டை குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், “நகைச்சுவை ஜாம்பவான் விவேக்கை இழந்துவிட்டோம்…அவரது மறைவு எவ்வளவு பெரிய இழப்பு” என்று தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமானின் ட்வீட்டை சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
பங்கை கரெக்ட்டா பிரிக்கணும்… அஸ்வின் – ஜடேஜாவின் வைரல் ரீல்ஸ்!