தமிழின் முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் மூலம் கிடைத்த வருமானம் குறித்து, பகிர்ந்து கொண்டுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையில் தீ, அறிவு இருவரும் இணைந்து பாடிய ‘எஞ்சாயி எஞ்சாமி’ என்ற பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு யூடியுபில் வெளியானது.
இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்பாடல் இதுவரை 48 கோடி பார்வைகளை கடந்துள்ளது. இந்த பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகப்போகும் நிலையில், சந்தோஷ் நாராயணன் பாடல் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர், ”’எஞ்சாயி எஞ்சாமி’ பாடல் வெளியாகி மூன்று ஆண்டுகளாக போகிறது. இந்த பாடலுக்கு கிடைத்த வரவேற்பு பற்றி உங்களுக்கு தெரியும். ஆனால் இந்த பாடல் மூலம் எங்களுக்கு கிடைத்த வருமானம் என்ன என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
#EnjoyEnjaami 🥁🥁 pic.twitter.com/rxRaPcPsUR
— Santhosh Narayanan (@Music_Santhosh) March 5, 2024
இதுநாள் வரையில் இந்த பாடல் மூலம் ஒரு பைசா கூட வருமானமாக எங்களுக்கு கிடைக்கவில்லை. சம்பந்தப்பட்ட மியூசிக் லேபிளை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். எங்களுக்கு ஏற்பட்ட இந்த அனுபவத்தால் நான் எனது சொந்த ஸ்டுடியோவை தொடங்கி உள்ளேன்.
தனி இசைக்கலைஞர்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் தளங்கள் தேவை, இதில் கூடுதலாக எனது யூடியூப் சேனல் வருமானமும், அந்த மியூசிக் லேபிளுக்கு செல்கிறது. இதை பொதுத்தளத்தில் சொல்ல விரும்பினேன்.
தனி இசைக்கலைஞர்கள் இனி கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்”, என வருத்தமும், நெகிழ்ச்சியுமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் சந்தோஷ் நாராயணனுக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வருகின்றனர்.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹன்சிகாவின் ‘கார்டியன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் எதிர்த்து நின்றால்… : கனிமொழி பேட்டி!