இயக்குநர் பேரி ஜென்கின்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள அனிமேஷன் திரைப்படமான ‘முஃபாசா : தி லயன் கிங் ‘ படத்தின் டிரெய்லர் இன்று (ஆகஸ்ட் 10) வெளியாகியுள்ளது.
ஹாலிவுட்டின் டிஸ்னி தயாரிப்பு நிறுவனத்தின் விழாவான டி23 எக்ஸ்போ – வில் ‘ முஃபாசா : தி லயன் கிங் ‘ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி உலகெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்ற அனிமேஷன் திரைப்படமான ‘ தி லயன் கிங் ‘ படத்தின் பிரிகுவெல்(Prequel) ஆகும். அதாவது முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் ‘தி லயன் கிங்’ திரைப்படத்திற்கு முன் நடந்த கதை.
எங்கிருந்தோ வந்த அனாதை சிங்கக் குட்டியான முஃபாசா எப்படி அந்தக் காட்டிற்கே ராஜாவானார், அவருக்கும் அவரது சகோதரன் ஆன ஸ்காருக்கும் எப்படி பகையாளிகளாக மாறினார்கள் என்பதை ‘ முஃபாசா : தி லயன் கிங் ‘ திரைப்படம் விவரிக்கும்.
இதில் இளம் வயது முஃபாசா கதாபாத்திரத்திற்கு ஆரோன் பைரே குரல் கொடுத்துள்ளார். ஸ்காருக்கு கெல்வின் ஹாரிசன் குரல் கொடுத்துள்ளார். மேலும், பிரபலமான பும்பா கதாபாத்திரத்திற்கு ஜான் கனி, டிமோன் கதாபாத்திரத்திற்கு ரஃபிகி ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.
2019 இல் வெளியான ‘ தி லயன் கிங் ‘ திரைப்படத்தின் திரைக்கதையை எழுதிய ஜெஃப் நாத்தன்சன் இந்தப் படத்திற்கும் திரைக்கதை எழுதியுள்ளார். லின் மானுவேல் மிராண்டா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
‘ ஹாட் ஸ்பாட்’ 2 ரெடி… புரோமோ எப்படி?