ஆதிக் ரவிச்சந்திரன் படத்தில் அஜித் ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
‘விடாமுயற்சி’ படத்திற்கு பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கிறார்.ஸ்ரீதேவி பிரசாத் இசையமைக்கும் இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் படத்தின் ஷூட்டிங் தொடங்கவிருக்கிறது. தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
முன்னதாக இப்படத்தில் அஜித் ஜோடியாக தபு நடிக்கலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு ஹீரோயினாக மிருணாள் தாகூர் அல்லது திஷா பதானி இருவரில் ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம்.
இதற்கு முன் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘SK 23’ படத்தில் மிருணாள் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. ஒருவேளை அஜித் படத்தில் நடித்தால் மிருணாள் தாகூருக்கு அது நல்லவொரு அறிமுகமாக இருக்கக்கூடும்.
மறுபுறம் திஷா பதானி தற்போது சூர்யா ஜோடியாக ‘கங்குவா’ படத்தில் நடித்துள்ளார். பொதுவாக அஜித் படத்தில் ஹீரோயின்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால் அவருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதனால் ‘AK 63’ படத்தில் அஜித் உடன் நடிக்கப்போவது மிருணாள் தாகூரா? இல்லை திஷா பதானியா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IND vs ENG: தோனி சாதனையை விரட்டி விரட்டி முறியடித்த ரோகித்… ஜடேஜா அபார சதம்!