மணிரத்னத்துடன் இணையும் படம் : குழப்பத்தில் ரஜினி?

சினிமா

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மம்முட்டி இருவரும் இணைந்து நடித்த தளபதி படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது.

வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதுடன்  ரஜினிகாந்தின் சம்பளம் உயர காரணமாக அமைந்த படம் தளபதி.

ரூ.20 லட்சங்களுக்குள் இருந்த ரஜினிகாந்தின் ஊதியம் தளபதிக்கு பின் 40 லட்ச ரூபாயாக உயர்ந்தது. அதன் பின் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை.

தற்போது மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் சம்பந்தப்பட்ட வேலைகள் நடந்து வருகின்றன.

இந்தப்படத்துக்கான திரைக்கதை உருவாக்கும் பணிகளில் இயக்குநர் மணிரத்னம்  ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ரஜினிகாந்த் மணிரத்னம் இணையும் இந்தப்படத்தைத் தயாரிக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் விருப்பம் தெரிவித்திருக்கிறது

இப்போது சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதற்கு அடுத்து லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க இருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வந்தன. இருந்தபோதிலும் லைக்கா நிறுவனம் அதனை உறுதிப்படுத்தவில்லை.

ரஜினிகாந்த் நடிக்கும் படங்கள் இந்திய பாக்ஸ்ஆபீஸ் வசூலில் அஜித்குமார், விஜய் படங்களின் வசூலை காட்டிலும் குறைவாகவே இருந்து வருகிறது.

ஓடிடி வருகைக்கு பின் முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் வியாபார எல்லை, மதிப்பு அதிகரித்து இருக்கிறது.

ஓடிடி, தொலைக்காட்சி நிறுவனங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடிக்கும் படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றன. பொன்னியின் செல்வன் முதல்பாகத்தின் வெற்றி இயக்குநர் மணிரத்னம் அடுத்து இயக்கப்போகும் படங்களின் வணிக மதிப்பை அதிகரித்து உள்ளது.

அதுவும் ரஜினிகாந்த் – மணிரத்னம் முப்பது ஆண்டுகளுக்கு பின் இணையும் படம் என்பதால் அந்தப் படத்தை தயாரிக்கவும், வாங்குவதற்கும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் ஏற்கனவே இரண்டு படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நெல்சன் இயக்கத்தில் மூன்றாவது படத்தையும் தயாரித்து வருகிறது.

மணிரத்னம் இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க விரும்பினாலும், லைக்கா அல்லது சன் பிக்சர்ஸ் அல்லது தனது மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் படத்தை இயக்குவதா என்பதை மணிரத்னம் தான் முடிவு செய்ய வேண்டி உள்ளது.

அதேநேரம் ஜெயிலர் படத்தை தொடர்ந்து எந்தப்படத்தில் நடிப்பது என்பதை ரஜினிகாந்த் முடிவு செய்ய முடியாத தடுமாற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இராமானுஜம்

மூன்று வேடங்களில் நடிக்கும் டொவினோ தாமஸ்

‘நீங்கள் ஒரு தேவதை’ : ஆட்சியருக்கு ஐஸ் வைத்து லீவ் கேட்ட மாணவர்கள்!

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *