காமெடியான கதைதான்.. ஆனா..?! movie review baby and baby
’சினிமாத்தனமா சீன்ஸ் இருந்தாலும், குடும்பத்தோட என்ஜாய் பண்ற மாதிரி ஒரு காமெடிப் படம் வேணும்ங்க’ என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிற வகையில் இருந்தது ‘பேபி & பேபி’ படத்தின் ட்ரெய்லர். ஜெய், பிரக்யா நக்ரா, யோகி பாபு, சாய் தன்யா, சத்யராஜ், கீர்த்தனா, இளவரசு, ஸ்ரீமன், பாப்ரி க்கோஷ், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கம்புலி, ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், தங்கதுரை, கேபிஒய் ராமர், மறைந்த ‘லொள்ளுசபா’ சேஷு, கல்கி ராஜா, ஆர்ஜே விக்னேஷ்காந்த் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இருந்ததையும் காட்டியது. movie review baby and baby
பிரதாப் இயக்கிய இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார் என்றறிந்ததும் எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. நல்லதொரு நகைச்சுவைப் படத்தைப் பார்க்கவிருக்கிறோம் என்ற எண்ணம் தலைதூக்கியது. movie review baby and baby
‘பேபி & பேபி’ தரும் திரையனுபவம் அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்திருக்கிறதா?
குழந்தை மாறிப் போச்சு..!
’பேபி & பேபி’ எனும் டைட்டில் மற்றும் அதன் ட்ரெய்லர் பார்த்தவுடனே, ‘குழந்தை மாறிப்போச்சு ரக கதை இது’ என்பது பிடிபட்டிருக்கும். படம் திரையில் ஓடத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிடுகிறது.
ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (சத்யராஜ்), ஒரு ஆண் வாரிசு வேண்டும் என்று விரும்புகிறார். அவரது மகளுக்கு அடுத்தடுத்து ஆண் குழந்தைகளே பிறக்கின்றன.
மகாலிங்கத்தின் மகன் சிவா, (ஜெய்) தந்தை தனது காதலுக்குப் பச்சைக்கொடி காட்டாததால், காதலி பிரியாவை மனைவியாக்கிக் கொண்டு வெளிநாட்டுக்குச் சென்றுவிடுகிறார். மருமகள் பிரியா (பிரக்யா நக்ரா) வீட்டில், அவரது தந்தைக்கு (நிழல்கள் ரவி) இந்த திருமணத்தில் சம்மதமில்லை.
இந்த நிலையில், சிவா – பிரியா தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அது, இரண்டு குடும்பத்தினரையும் மகிழ்ச்சியடையச் செய்கிறது.
இன்னொரு புறம், ஒரு பெண் குழந்தை பிறந்தால் குடும்பத்தின் தலையெழுத்தே மாறிப் போகும் என்று ஜோதிடர் சொன்ன தகவலைச் சுமந்து கொண்டு திரிகிறார் முத்தையா (இளவரசு). வெளிநாட்டில் வசிக்கும் அவரது மகன் குணாவோ (யோகிபாபு), தந்தையிடம் சொல்லாமல் கொள்ளாமல் மலர் (சாய் தன்யா) எனும் பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொள்கிறார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.
விஷயம் அறிந்ததும், ‘பேத்தியை உடனே தூக்கிக்கிட்டு வா’ என்கிறார் முத்தையா. அவ்வாறே செய்கிறார் குணா. movie review baby and baby
குணாவுக்கு ஒரு மூத்த சகோதரர் உண்டு. அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அதனால் அவர்கள் மீது முத்தையா பெரிதாகப் பாசம் காட்டுவதில்லை. movie review baby and baby
விமானத்தில் வரும்போது, இரண்டு குழந்தைகளும் இடம் மாறுகின்றன. என்ன நடந்தது என்று தெரிந்து சுதாரிப்பதற்குள், மதுரையில் இருக்கும் தனது வீட்டை நோக்கிப் பயணிக்கிறார் குணா. பழனியை நோக்கிச் செல்கிறார் சிவா. ’குழந்தை எங்கே’ என்ற உண்மையை அறிந்த இருவரும், வழியில் ஓரிடத்தில் குழந்தைகளை மாற்றிக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால், அதனைச் செய்ய முடிவதில்லை.
இதற்கிடையே, சிவா கைவசம் இருக்கும் குணாவின் குழந்தை காணாமல் போகிறது. அதன்பிறகு என்னவானது? குழந்தையைக் கடத்தியவர்கள் யார் என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறது ‘பேபி & பேபி’யின் மீதி. movie review baby and baby
இக்கதையைக் கேட்டதும் மனதுக்குள் கற்பனை கிளை விரிக்கும். அதற்கு இடம் கொடுக்காமல், ‘காமெடி கதைதான்.. ஆனா’ என்று ‘இழுவை’யுடன் பதிலளிக்கிறது திரைக்கதை. நடிப்புக்கலைஞர்கள் தொடங்கிப் பலரது பங்களிப்பை அதில் செலுத்தியிருந்தால், அந்தக் குறையை எளிதில் சரி செய்திருக்க முடியும். ஆனால், அது நிகழவில்லை. movie review baby and baby
சில அம்சங்கள் ‘ஓகே’! movie review baby and baby

ஜெய், யோகிபாபு, சத்யராஜ், இளவரசு, சத்யராஜ் தொடங்கிப் பல நட்சத்திரக் கலைஞர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ஆனாலும், அவர்கள் முத்திரை பதிக்கும்விதமான காட்சிகள் படத்தில் இல்லை. movie review baby and baby
ஸ்ரீமன், ஆனந்தராஜ், நிழல்கள் ரவி, சிங்கம்புலி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, ஆர்ஜே விக்னேஷ்காந்த், தங்கதுரை, கேபிஒய் ராமர், மறைந்த காமெடி நடிகர் சேஷு, கல்கி ராஜா என்று பலர் இருந்தும், அவர்கள் ஏற்கனவே நடித்த சில காமெடி காட்சிகள், வசனங்கள் பயன்படுத்தப்பட்டிருந்தும், ‘சிரிப்பே வரலை’ என்பது போன்றிருக்கிறது காட்சியமைப்பு.
பிரக்யா நக்ரா, சாய் தன்யா, கீர்த்தனா, பாப்ரி கோஷ் என்று பெண் கலைஞர்களின் இருப்பும் இதில் வீணடிக்கப்பட்டிருக்கிறது. movie review baby and baby
இப்படத்தினை எழுத்தாக்கம் செய்து பிரதாப் இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் சாரதி, படத்தொகுப்பாளர் ஆனந்தலிங்ககுமார், உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் அவருக்கு உதவியிருக்கின்றனர். ஆனாலும், ’இது அல்லவோ திரைப்படம்’ என்று சிலாகிக்க முடியாதவாறு உருவாக்கப்பட்டிருக்கிறது ‘பேபி & பேபி’. movie review baby and baby
இதற்கு நடுவே, தனியொரு ஆளாக இப்படத்தைச் சரிவில் இருந்து மீட்கும் முயற்சியில் தன்னை ஈடுபத்திக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் டி.இமான்.
’ஆரா அமுதே’, ’என்ன தவம் செய்தேனோ’ பாடல்களைத் தாலாட்டு போன்று அமைத்தவர் ‘தென்பாண்டி முத்துப் போல’, ’கிங்கினி கிங்கினி’ பாடல்களில்ல் துள்ளலாட்டத்தை விதைத்திருக்கிறார். தேமேவென்று வெறுமையாக நகரும் காட்சிகளிலும், தனது பின்னணி இசை வழியே நகைச்சுவையைத் தூவ முயற்சித்திருக்கிறார். movie review baby and baby
இரண்டு குடும்பங்கள். இரு பக்கமும் குழந்தைகள் குறித்த வெவ்வேறு பார்வை மற்றும் எதிர்பார்ப்பு. அவை நிறைவேறாது எனும் வகையில் அமைந்த திரைக்கதை திருப்பம். அதற்கேற்றவாறு இப்படத்தில் சில காட்சிகள், சில அம்சங்கள் ஆங்காங்கே ‘ஓகே’ ரகத்தில் உள்ளன.
ஆனால், அவற்றைக் கண்டு ரசிக்க, நகைச்சுவையை வீசியெறிந்துவிட்டு நகரும் முக்கால்வாசி சொச்சம் திரைக்கதையைச் சகிப்புத்தன்மையோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இமானின் பாடல்களும், திரையில் முகம் காட்டும் நட்சத்திரப் பட்டாளத்தின் இருப்பும் அதற்கு உதவக்கூடும்.
எல்லாமே இருந்தும் எதுவும் நிகழாதபோது எழுகிற வெறுமையை எதனைக் கொண்டு சரி செய்வது? ‘பேபி & பேபி’ படம் பார்த்தபிறகு, அப்படியொரு உணர்வுடன் தியேட்டரை விட்டு வெளியே வர வேண்டியிருக்கிறது. movie review baby and baby