Movie distributor Varun praises

வேற லெவல் படம்… ‘டிமான்ட்டி காலனி 2’ பார்த்து மிரண்டுபோன விநியோகஸ்தர்!

“எனது வாழ்நாளில் ‘டிமான்ட்டி காலனி 2’  படத்தைப் போல ஒரு ஹாரர் திரைப்படத்தை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்ததில்லை” என்று விநியோகஸ்தர் வருண் தெரிவித்துள்ளார்.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு கோப்ரா படம் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்னதாக படம் பற்றிய பிம்பத்தை பிரம்மாண்டமாக கட்டமைத்தனர். படம் வணிக ரீதியாக மோசமான தோல்வியை எதிர்கொண்டது.

தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்பட பலர் நடிக்கும் ‘டிமான்ட்டி காலனி 2’  படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ள விநியோகஸ்தர் வருண், தான் படத்தை பார்த்து விட்டதாகவும், படம் எப்படி இருக்கிறது என்பதை அதிகபட்ச பாராட்டுகளுடன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“டிமான்ட்டி காலனி 2… வாவ் வாவ்… என்ன ஒரு திரைக்கதை அஜய் ஞானமுத்து ப்ரோ.

ஆகஸ்ட் 15ம் தேதி மொத்த இந்தியத் திரையுலகமும் உங்களது திரைக்கதை பற்றிப் பேசும்.

‘மகாராஜா’ படத்திற்குப் பிறகு இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை வாங்கியது எங்களுக்கு அதிர்ஷ்டமே.

எனது வாழ்நாளில் இப்படி ஒரு ஹாரர் திரைப்படத்தை சீட்டின் நுனியில் அமர்ந்து பார்த்ததில்லை.,

மொபைல் போனை இரண்டரை மணி நேரமும் தொடவேயில்லை. பிரியா பவானி சங்கர் மீதான அனைத்து எதிர்மறையும், டிரோல்களும் இந்தப் படத்துடன் முடிந்துவிடும்.

இந்த ஸ்கிரிப்ட்டிற்குத் தேவையான அளவு அருள்நிதி அற்புதமாக நடித்திருக்கிறார். விமர்சகர்களுக்கு சாரி, இந்தப் படத்தில் இருந்து எப்படி ஒரு குறையைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்” என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக உள்ள ‘தங்கலான்’, ‘டிமான்ட்டி காலனி – 2’ ஆகிய இரண்டு படங்களுக்கும் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பிம்பம் படங்களுக்கான முன்பதிவில் இல்லை என்று திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

இராமானுஜம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியா? – ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

‘கங்குவா’ டிரெய்லர்… ரசிகர்கள் ரியாக்‌ஷன் இதோ!

தமிழகத்தில் மனை, கட்டட மேம்பாட்டாளர்கள் திட்ட பதிவு: கட்டணம் எவ்வளவு?

அமெரிக்க அரசியல் குழப்பமும் அதன் சமூகப் பொருளாதாரமும்! பகுதி 1

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts