Movies: இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட ‘டாப் 8’ படங்கள்… முதலிடம் யாருக்கு?
சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட ஹேஷ்டேக்குகள் மற்றும் இந்தியளவில் அதிகம் பேசப்பட்ட படங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
அதன்படி இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட டாப் 8 படங்களாக ‘லியோ’, ‘சலார்’, ‘வாரிசு’, ‘துணிவு’, ‘ஜவான்’, ‘ஆதிபுருஷ்’, ‘பதான்’ மற்றும் ‘டன்கி’ படங்கள் இருக்கின்றன. இதில் தளபதி விஜய் முதலிடத்தை பிடித்துள்ளார். ‘லியோ’, ‘வாரிசு’ என அவரின் இரண்டு படங்கள் இதில் இடம்பெற்று இருக்கின்றன.
டோலிவுட் நடிகர் பிரபாஸ் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். ‘சலார்’, ‘ஆதிபுருஷ்’ என பிரபாஸின் நடிப்பில் வெளியான 2 படங்கள் இந்த பட்டியலில் உள்ளன. 4-வது இடத்தினை ‘துணிவு’ படத்தால் அஜித் பிடித்துள்ளார்.
5-வது இடமாக இருந்தாலும் ‘ஜவான்’, ‘பதான்’, ‘டன்கி’ என, பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் 3 படங்கள் இதில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்ட ஹேஷ்டேக்குகளாக #newprofilepic, #crypto, #leo, #nft, #pathaan, #prabhas, #elvishyadav, #adipurush, #biggboss உள்ளன. இதில் இடம்பெற்ற ஒரே நடிகராக பிரபாஸ் இருக்கிறார். அதேபோல அவரின் ‘ஆதிபுருஷ்’ படமும் இடம்பெற்று இருக்கிறது.
இந்தியில் சல்மான்கானும், தமிழில் கமல்ஹாசனும் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, சமூக வலைதளங்களில் அதிக விவாதங்களை ஏற்படுத்திய ஹேஷ்டேக் ஆக இருக்கிறது. ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்படம் இந்த பட்டியலிலும் இடம்பெற்று இருக்கிறது.
இந்தியளவில் அதிகம் பேசப்பட்ட படம் மற்றும் சமூக வலைதளங்களில் அதிக ஹேஷ்டேக்குகள் என்ற இரண்டு பட்டியலிலும், விஜயின் ‘லியோ’ இடம்பிடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதவும் ஒன்றிய அரசு அமைந்தால் பத்து மடங்குத் திட்டங்கள்: பொள்ளாச்சியில் ஸ்டாலின் பேச்சு!
22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை: உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ தகவல்!