இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் நாயகனாக தனிக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருப்பவர் விஜய் ஆண்டனி. இசை மட்டுமின்றி நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது விஜய் ஆண்டனி ‘அக்னி சிறகுகள்’, ‘காக்கி’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘வள்ளி மயில்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தை இயக்கியும் நடித்தும் வருகிறார். சமீபத்தில் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதனிடையே, நான் 90% குணம் அடைந்து விட்டேன்.உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன.
என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன் என்று சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 9 ) பிச்சைக்காரன் 2 படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. “money is injures to the world” – “பணம் உலகை காலி பண்ணிடும்” என்று வாசகத்துடன் விஜய் ஆண்டனி இருக்கும் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் நான்கு நிமிட காட்சியை முன்னோட்டமாக நாளை (பிப்ரவரி 10 ) வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வாரிசு படத்தின் வெற்றி மகிழ்ச்சியை கொடுத்தது: கணேஷ் வெங்கட் ராம்
‘எம்.ஜி.ஆர், கருணாநிதி ஆட்சியைக் கலைத்தது காங்கிரஸ்’: நாடாளுமன்றத்தில் மோடி