தீனா,கஜினி, துப்பாக்கி, கத்தி என தமிழ் சினிமாவில் பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். கடந்த 2020 ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததால் சினிமாவில் இருந்து ஒரு சின்ன ப்ரேக் எடுத்துக் கொண்டார் ஏ.ஆர். முருகதாஸ்.
தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை இயக்க தயாராகி விட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். சமீபத்தில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியானது. மேலும் SK 23 படம் ஒரு பான் இந்தியா படமாக தயாராக போவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது SK 23 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால் உடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் வித்யுத் ஜமால் அவர்களும் SK 23 படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் SK 21 படத்தின் பணிகளை முடித்த பின் SK 23 படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
BiggBossTamil7: மீண்டும் ஸ்டார்ட் ஆகும் விஷ்ணு-பூர்ணிமா லவ்?
விடாமுயற்சியில் அஜித்துக்கு வில்லன் யார்?