‘வெள்ளை சட்ட போட்டா அரசியல்வாதியா?’: விக்ரமன் அசீமுக்கு இடையே முற்றிய வாக்குவாதம்!

சினிமா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவை பெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு அடிக்கடி டாஸ்க் கொடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ரேங்கிங் டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது.

இதில் கதை சொல்லும் நேரம் டாஸ்க்கில் வென்றவர்களை தவிர எஞ்சியுள்ள 13 பேரும் பங்கேற்றுள்ளனர். அதில் ஒவ்வொருவரும், தான் இந்த ரேங்கிற்கு தகுதியானவர் எனக் கூறி ஒவ்வொரு இடத்தில் நிற்க வேண்டும்.

அந்த டாஸ்க்கில் அசீமுக்கு 13 வது இடம் கொடுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவர், ஆயிஷா, விக்ரமன் ஆகியோரெல்லாம் தகுதியே இல்லாதவர்கள் என பேசி இருந்தார்.

விக்ரமன் எப்போதும் தூங்கிக் கொண்டு இருப்பதால் அவர் ஆறாவது இடத்தில் நிற்க தகுதி இல்லாதவர் என கூறினார் அசீம்.

உடனே ‘நீ என்ன வேலை பண்ணீருக்க’ என விக்ரமன் கேட்க, ‘யோவ்’ என குரலை உயர்த்தினார் அசீம்.

இதனால் கடுப்பான விக்ரமன் ‘யோவ்னுலாம் பேசாத’ என சொல்ல, அதற்கு அசீம், ‘அப்படி தான் டா பேசுவேன், வேலைய பாருடா போடா ‘ என தரக்குறைவாக பேசினார்.

இதனால் டென்ஷன் ஆன விக்ரமன், ‘நீ வாட்ல இளவரசன் மாதிரி வர்ற எல்லாரையும் வாடா போடானு சொல்ற ‘என தட்டிக் கேட்க.

பதிலுக்கு அசீம், ‘வெள்ளை சட்டை போட்டா நீ என்னடா அரசியல்வாதியா’ என கேட்க, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

பின்னர் அங்கிருந்த சக ஹவுஸ்மேட்ஸ் அவர்களை சமாதானப்படுத்தும் காட்சிகள் தற்போது வெளியான புரோமோவில் இடம்பெற்று உள்ளன.

இதன்மூலம் இன்று (அக்டோபர் 21 ) பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகப்பெரிய சண்டை காத்திருக்கிறது என்று கூறுகின்றனர் பிக்பாஸ் ரசிகர்கள்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மீண்டும் வில்லன் அவதாரமெடுக்கும் கௌதம் மேனன்

சர்தார், பிரின்ஸ்: ட்விட்டரில் வைரலான விமர்சனங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *