நடிகர் அஜித்குமார் தந்தை பி.எஸ்.மணி மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் தந்தை இன்று (மார்ச் 24) அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார்.
கடந்த 4 ஆண்டுகளாக அவர் பக்கவாதம் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நடிகர் அஜித்குமார் தந்தை மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில்,
“அஜித்குமார் அவர்களின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி கேட்டு வருந்தினேன்.
தந்தையின் பிரிவால் வாடும் அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்