சென்னையில் அரசு உதவியுடன் கச்சேரிகள் நடத்த மாநாட்டு மையம் அமைக்க வேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை விடுத்த நிலையில் விரைவில் சென்னை பனையூரில் கலைஞர் மாநாட்டு மையம் அமைக்கப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை பனையூரில் நேற்று (ஆகஸ்ட் 12) நடைபெறவிருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி மழை காரணாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஏ.ஆர் ரஹ்மான் ரசிகர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர். இதுகுறித்து ரசிகர்கள் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னையில் அரசு உதவியுடன் கலை, கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக சர்வதேச உள்கட்டமைப்பு கொண்ட அரங்கை உருவாக்குவோம் என நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “இந்த நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேற்றப்படும். சர்வதேச அளவிலான கச்சேரிகள், நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், மாநாடுகள் நடத்தும் வகையில் உலகத்தரம் வாய்ந்த கலைஞர் மாநாட்டு மையம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்படும். அந்த மாநாட்டு மையமானது ஹோட்டல்கள், உணவு விடுதிகள், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கலாச்சார சின்னமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
அன்பில் மகேஷ் ஹெல்த் ரிப்போர்ட்: மருத்துவமனை அறிக்கை!
Comments are closed.