பூவரசம் பீப்பீ, சில்லு கருப்பட்டி போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ஹலிதா ஷமீம்.
சில்லு கருப்பட்டி படத்திற்கு பிறகு 2015ஆம் ஆண்டு ‘மின்மினி’ என்ற திரைப்படத்தை இயக்க தொடங்கினார் ஹலிதா.
Coming of Age genre-ல் நாம் நிறைய படங்களை பார்த்திருப்போம். ஆனால் Coming of Age genre படங்களில் ஹீரோ, ஹீரோயின் சிறு வயது கதாபாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்கள் யாராவது நடித்திருப்பார்கள்.
உதாரணத்திற்கு 96 படத்தில் பள்ளி பருவ கதைக்களத்தில் ராம், ஜானு கதாபாத்திரங்களில் ஆதித்யா மற்றும் கௌரி ஆகியோர் நடித்திருப்பார்கள், நிகழ் கால ராம், ஜானு கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, திரிஷா நடித்திருப்பார்கள்.
ஆனால் தற்போது ஹலிதா இயக்கியுள்ள மின்மினி படத்தில் குழந்தை பருவத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் வளரும் வரை காத்திருந்து அவர்களின் இளம் வயது கதாபாத்திரத்திலும் அவர்களை நடிக்க வைத்துள்ளார்.
2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மின்மினி படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் குழந்தை பருவ காட்சிகளை படமாகி முடித்துவிட்டு, அதன்பின் அந்த குழந்தைகள் வளர கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் காத்திருந்து இளமை பருவ காட்சிகளை படமாகி உள்ளார் ஹலிதா.
இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
மின்மினி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “இரு பெரும் நதிகள்” என்ற பாடல் வீடியோவை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார்.
கூடிய விரைவில் இந்த படம் குறித்து அடுத்த அப்டேட்ஸ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– கார்த்திக் ராஜா
தெலங்கானா… வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு! – 5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4
விக்ரமின் “தங்கலான்” கம்மிங் சூன்!
தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் அதிகம்… மிகப் பெரிய தொகுதி எது? சிறிய தொகுதி எது?