திரைதுறையினருக்கு அமைச்சர் அளித்த உறுதி!

சினிமா

பிரபல எடிட்டர் பி.லெனின் கதை, திரைக்கதையில், இ.வி.கணேஷ்பாபு, இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கட்டில்”.

இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழா ஜனவரி 3ஆம் தேதி மாலை சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு இசை தட்டை வெளியிட்டார் தமிழ்நாடு அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்.

பின்னர் அவர் பேசுகையில், “ மிகச்சிறப்பான படைப்பாக கட்டில் திரைப்படத்தை உருவாக்கியிருக்கும் இ.வி.கணேஷ்பாபு குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்.

வியாபார நோக்கம் இல்லாமல் சமூக சூழலை சுற்றி இக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

எளிமையான வாழ்வை சொல்லும் எதார்த்தமான படமாக அமைந்திருப்பதால் மிகப்பெரிய வெற்றிபெறுமென வாழ்த்துகிறேன்.

கலைஞர் திரைத்துறை மீது அக்கறை கொண்டவராக இருந்தார். அதே போல் இன்று, நம் முதல்வர் ஸ்டாலின் திரைத்துறை மீது மிகுந்த அக்கறையோடு உள்ளார்.

தமிழ்நாடு அரசு சினிமாத்துறை சிறந்து விளங்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. திரைத்துறையிலிருந்து பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

அவை அனைத்தையும் அரசு ஆராய்ந்து செய்து தருமென உறுதி கூறுகிறேன். இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இராமானுஜம்

ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

பன்னீரை நீக்கியது ஏன்?: முடிவுக்கு வரும் அதிமுக பொதுக்குழு வழக்கு!

ஷங்கர் இல்லாமல் நடக்கும் படப்பிடிப்பு: ஏன்?

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0