தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா சச்சின் டெண்டுல்கரை சந்தித்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் அதை ‘மில்லியன் டாலர் படம்’ என பகிர்ந்து வருகின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. ஏராளமான ரசிகர்களை கொண்டவர். இவர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில், “மரியாதை & அன்பு!!” என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளார்.
சூர்யா டெனிம் சட்டை மற்றும் ஐவரி நிற பேன்ட் அணிந்திருந்தார். சச்சின் டெண்டுல்கர் மல்டி ஷேட் கலர் ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தார்.
இந்தப் புகைப்படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இருப்பினும், ஹைதராபாத்தில் நடந்த கார் பந்தய நிகழ்ச்சிக்கு சச்சின் சமீபத்தில் சென்றிருந்தார்.
அப்போது இது கிளிக் செய்யப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. அதே சமயம் சூர்யா தனது வரவிருக்கும் சூர்யா 42 படத்திற்காக அடிக்கடி மும்பைக்கு பயணம் செய்து வருகிறார், அந்தப் பயணத்தின் போது அவர் சச்சினை சந்தித்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
சச்சினும், சூர்யாவும் இணைந்திருக்கும் படத்தை ரசிகர்கள் பிக்சர் ஆப் தி டே என்று கொண்டாடி பகிர்ந்து வருகின்றனர்.
கலை.ரா
பேஸ்புக்கில் காரசார பதிவுகள்… நடிகர் ராஜ்கிரணுக்கு கொலை மிரட்டல்?
தென்காசி வழக்கு: கிருத்திகா வைத்த சஸ்பென்ஸ்! ஏமாற்றத்துடன் சென்ற காதல் கணவர்!