சூது கவ்வும், காதலும் கடந்து போகும் ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றவர் இயக்குனர் நலன் குமாரசாமி.
நீண்ட காலங்களுக்குப் பின் தற்போது நலன் குமாரசாமி ஓர் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்க கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தில் நடிகர்கள் சத்யராஜ் மற்றும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றார்கள்.
பெயரிடப்படாத இந்த படத்தில் நடிகர் ராஜ்கிரணுக்கு பேரனாக நடிகர் கார்த்தி நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் இவர்கள் இருவரின் கதாபாத்திரங்களும் எம்ஜிஆர் ரசிகர்களாம். சமீபத்தில் கூட நடிகர் கார்த்தி இந்த படத்தின் ஒரு காட்சியில் மட்டும் எம்ஜிஆர் கெட்டப்பில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்த படத்தை ஒரு பக்கா ஆக்சன் கமர்ஷியல் படமாக உருவாக்குகிறாராம் இயக்குனர் நலன் குமாரசாமி.
இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு “வா வாத்தியாரே” என்று டைட்டில் வைக்க படக் குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
நடிகர் கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தின் ரிலீஸுக்கு பின் கார்த்தி-நலன் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கார்த்திக் ராஜா
தேவர் ஜெயந்தி: முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார்!
பியூட்டி டிப்ஸ்: சமூக வலைதள அழகுக் குறிப்புகள்… கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்!