நடிகை சமந்தா குறித்து அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவிடம் கேட்ட கேள்விக்கு அளித்த பதில் ஹாட் ஆகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, பிறமொழி படங்களிலும் நடித்துவருகிறார். தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தபிறகு, வெப் சீரிஸ், குத்தாட்டப் பாடல்களில் எல்லாம் தலைகாட்டி வருகிறார்.
இதனால் அவருடைய வருமானம் கோடிக்கணக்கில் புரள்வதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர, கவர்ச்சி மழையிலும் நனைந்து வருகிறாராம். தற்போது தெலுங்கில் சாகுந்தலம், யசோதா மற்றும் குஷி உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் சமந்தா, விரைவில் மலையாளப் படமொன்றில் துல்கர் சல்மானுடன் இணைய இருக்கிறாராம்.
இந்த நிலையில், அமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள ’லால் சிங் சத்தா’ என்ற திரைப்படத்தில் நடிகரும் சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யாவும் நடித்துள்ளார். இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுவரும் நாக சைதன்யாவிடம், “சமந்தாவை நீங்கள் நேரில் பார்த்தால் என்ன செய்வீர்கள்” என நிருபர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த நாக சைதன்யா, ‘அப்படி சந்திக்க நேர்ந்தால், ஒரு ‘ஹாய்’ சொல்லி கட்டிப்பிடிப்பேன்’ எனப் பதிலளித்துள்ளார். தொடர்ந்து அவரது கையிலிருக்கும் டாட்டூ குறித்து கேள்வி கேட்டபோது, ‘அது தன் திருமண நாள் குறித்தது என்றும், அதனை அழிக்கும் எண்ணம் இதுவரை வந்ததில்லை’ என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ’காஃபி வித் கரண்’ நிகழ்ச்சியில் பங்குபெற்ற நடிகை சமந்தாவிடம், ‘நாகசைதன்யாவையும் உங்களையும் ஓர் அறைக்குள் தள்ளினால் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டதற்கு, ‘எங்கள் இருவரையும் ஒரு அறையில் அடைத்து வைக்க வேண்டும்.
ஆனால், அங்கு கத்தி போன்ற மிகவும் ஷார்ப் ஆன பொருட்கள் எதுவும் இருக்ககூடாது’ எனப் பதிலளித்திருந்தார். இது, நாக சைதன்யா மீது சமந்தாவுக்கு இருக்கும் கோபத்தையே வெளிக்காட்டியதாகச் சொல்லப்பட்டது.
ஜெ.பிரகாஷ்
கிளாமர் இல்லாததால் படத்தை யாரும் வாங்கல : அமலா பால்