நடிகை ஐஸ்வர்யா ராய் தமிழில் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் அவரின் கதாபாத்திரத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தியாவிலிருந்து பலர் உலக அழகி பட்டம் வென்றிருந்தாலும் ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்த ஏற்றம் போல வேறு யாருக்கும் கிடைக்கவில்லை.
தமிழ் மற்றும் பாலிவுட் சினிமாவில் ஐஸ்வர்யா தனக்கென்று தனி இடத்தை மக்கள் மனதில் பிடித்துள்ளார். இவர் நடிகர் அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் போல் இருக்கும் ஒரு பெண்ணின் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
இந்த பெண் பாகிஸ்தான் தொழிலதிபர் கன்வால் சீமா ஆவார். இவர் ‘மை இம்பேக்ட் மீட்டர்’ டிஜிட்டல் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இஸ்லாமாபாத்தில் பிறந்த இவர், ரியாத்திலுள்ள அமெரிக்கன் பிரிட்டிஷ் பள்ளியில் படித்தவர். தற்போது, பாகிஸ்தானில் சிறந்த பெண் தொழில்முனைவோராக அறியப்படுகிறார். ஒருமுறை இவரிடத்தில் செய்தியாளர் ஒருவர் பேட்டி எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது, நீங்கள் பார்ப்பதற்கு ஐஸ்வர்யா ராய் போலவே உள்ளீர்கள்? என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த சீமா, நீங்கள் நான் பேசுவதை கேட்க வந்துள்ளீர்களா? அல்லது எனது தோற்றத்தை பார்க்க வந்துள்ளீர்களா? என்று அதிரடியாக பதிலளிக்க எதிர்முனை கப்சிப் ஆகி விட்டது.
தனது பிசினஸ் வெற்றிக்கு தனது கணவரும் அவரின் வீட்டாரும்தான் காரணமென்றும் அந்த பேட்டியில் சீமா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
விமானங்களில் முழு தேங்காய்க்கு அனுமதியில்லை ஏன்?- சபரிமலை பக்தர்களுக்கு விலக்கு!