மலையாள நடிகையான மீரா ஜாஸ்மின் 2002ல் லிங்குசாமி இயக்கத்தில் தயாரான ரன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
மாதவன், ரகுவரன் நடித்த இந்தப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மீரா ஜாஸ்மினை துறுதுறு குடும்ப பெண்ணாக அடையாளப்படுத்தியது.
தொடர்ந்து தமிழில் ஏராளமான படங்களில் நாயகியாக நடித்தார்.

திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு ஒதுங்கிபோனார். மீண்டும் நடிப்பதற்கான முயற்சியை 40 வயதை கடந்து விட்ட மீரா ஜாஸ்மின் தொடங்கியுள்ளார்.
40 வயதை எட்டிய பின்னரும், இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக, மீரா ஜாஸ்மின் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை மீரா ஜாஸ்மின் என்றதுமே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது, ரன் படத்தில்… அமைதியாக ரசிகர்கள் மனதை ஆக்கிரமித்த அவரது அழகும்,
‘சண்ட கோழி‘ படத்தில் துரு துரு குடும்ப குத்துவிளக்காக நடித்த அவரது கதாபாத்திரமும் தான்.
ஆனால் தற்போது திடீர் என, கவர்ச்சியில் குதித்துள்ள மீரா ஜாஸ்மின்… அவ்வப்போது விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இளம் நடிகைகளுக்கு போட்டியாக உள்ளது.

அதே நேரம் பட வாய்ப்புகளுக்காக மீரா ஜாஸ்மின் இப்படி கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறாரா என்கிற கேள்வியும் எழுந்து வருகிறது.
கடைசியாக மீரா ஜாஸ்மின் தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான, ‘விஞ்ஞானி’ படத்தில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் ‘மக்கள்’ என்கிற படத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அம்பலவாணன்