மாயாண்டி குடும்பத்தார் 2 படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்!

சினிமா

பிரசாந்தின் பூ மகள் ஊர்வலம், ராகவா லாரன்ஸின் பாண்டி போன்ற படங்களை இயக்கிய ராசு மதுரவன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படம் மாயாண்டி குடும்பத்தார்.

இந்த படத்தில் மணிவண்ணன், பொன்வண்ணன், சீமான், தருண் கோபி, கே.பி.ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தற்போது வெளியாகும் படங்களுக்கு குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படம் என்ற டேக் லைன் கொடுக்கப்படுகிறது.

ஆனால் பல வருடங்களுக்கு முன்பே உண்மையாகவே குடும்பங்கள் கொண்டாடி வெற்றியடைய செய்த திரைப்படம் தான் மாயாண்டி குடும்பத்தார்.

அப்பா பாசம், சகோதரர்கள் பாசம், காதல், குடும்ப பிரச்னைகள் என ஒரே திரைப்படத்தில் பல வகையான எமோஷன்களை சேர்த்து ரசிகர்களை ரசிக்க வைத்து அழ வைத்து கொண்டாட வைத்தது இந்த மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம்.

இந்நிலையில் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த அறிவிப்பு குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பதிவில்,

“கடந்த 2009 ஆம் ஆண்டு United Arts நிறுவனம், மறைந்த இயக்குனர் ராசு மதுவரனின் எழுத்து இயக்கத்தில் மாயாண்டி குடும்பத்தார் என்ற அற்புதமான திரைப்படத்தை தயாரித்தது. அதற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாம் பரிசு கிடைக்கப்பெற்றது.

தற்போது அதே நிறுவனம் மாயாண்டி குடும்பத்தார் 2 என்ற படத்தை தயாரிக்க இருக்கிறது. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் K.P. ஜெகன்.

முதல் பாகத்தில் நடித்த அதே கதையின் மாந்தர்கள் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயாண்டி குடும்பத்தார் 2 படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் கே.பி. ஜெகன், மாயாண்டி குடும்பத்தார் முதல் பாகத்தில் நான்கு சகோதரர்களில் ஒருவராக நடித்திருப்பார்.

மேலும் அவர் இதற்கு முன் நடிகர் விஜய்யின் புதிய கீதை, சேரனின் ராமன் தேடிய சீதை, கோடம்பாக்கம், என் ஆளோட செருப்ப காணோம் ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இங்கிலாந்து: மாணவர் விசாவில் இனி குடும்பத்தினருக்கு அனுமதியில்லை!

சர்வர் பிரச்சினை: ஒரு மாதமாக பணப்பலன்கள் பெற முடியாத தொழிலாளர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *