இயக்குநர் வெங்கட் பிரபு பல படங்களை இயக்கி உள்ளார். தற்போது விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தையும் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இவரது சகோதரர் பிரேம்ஜி அமரன். இவர் நடிகராகவும், பாடகராகவும் உள்ளார்.
நீண்ட நாள்களாக சிங்கிளாகவே இருந்த பிரேம்ஜி, தற்போது தான் விரும்பும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள உள்ளார். இவர்களின் திருமணம் வரும் ஜூன் 9ம் தேதி எளிமையான முறையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பான செய்தியும், திருமணப் பத்திரிக்கையும் கடந்த வாரம் முதலே சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குநர் வெங்கட்பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் கடிதம் ஒன்றை இன்று (ஜூன் 5) வெளியிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில், “எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது.
“பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்?” “சொப்பனசுந்தரியை இப்போ யாரு
வெச்சிருக்கா?” இதை எல்லாவற்றையும் விட, “பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?” என்ற
உங்கள் கேள்விக்குப் பதில், வரும் 9ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும்
நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை,
அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.
அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார்.
எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன்.
எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி
அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில்
அனைவரையும் சந்திப்போம்! BTW, THE GOAT அப்டேட் விரைவில்…” என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒடிசா : 24 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு… நவீன் பட்நாயக் ராஜினாமா!
World Environment Day 2024: ஒரே ஒரு பூமியின் சுற்றுச்சூழல் தினம்!