நடிகை அம்மு அபிராமி திருமணம் குறித்து ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.
விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் அம்மு அபிராமி. தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படத்தில் நடித்ததற்கு பிறகு தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாகவும் மாறினார். தற்போது நடைபெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது ரன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சமூக ஊடகங்களிலும் ஆக்டிவாக இருப்பவர் அம்மு அபிராமி. இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். உங்களுக்கு எப்போது திருமணம் என்று ரசிகர்கள் அம்மு அபிராமியிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், “இப்போது எனக்கு வயது 22 தான் ஆகிறது. எனக்கு திருமணம் செய்வதை விட வாழ்க்கையில் பல இலக்குகள் உள்ளன. அதனால் திருமணம் செய்து கொள்ள இது சரியான தருணம் இல்லை. சரியான நேரம் வரும் போதுதான் திருமணம் செய்து கொள்வேன்” என்று பதிலளித்தார். சினிமாவில் அவர் பெரிதாக சாதிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது அம்மு அபிராமி பல படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதில் பேட்டரி, காரை, நிறங்கள் மூன்று, கண்ணகி, கனவுகள் மெய்ப்பட, போன்ற பல படங்கள் கைவசம் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மோனிஷா