விஷால் நடித்து வரும் படப்பிடிப்பு தளத்தில் விபத்து!

Published On:

| By Jegadeesh

நடிகர் விஷால் நடித்த வரும் ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.

லத்தி திரைப்படத்தை முடித்திருக்கும் நடிகர் விஷால், தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ’’மார்க் ஆண்டனி’’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இது விஷாலின் 33-வது படமாகும். இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.

இந்த திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் ‘Pan India’ திரைப்படமாக வெளியிட தயாரிப்பாளர் வினோத்குமார் திட்டமிட்டிருக்கிறார்.

இந்நிலையில், மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னைக்கு அருகே உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.

mark antony shooting spot accident

அப்போது லாரியை வைத்து சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் படப்பிடிப்பு மூன்று மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

வாட்டி வதைக்க போகும் வெயில்: வானிலை மையம்!

100 கிமீ … வனத்துறையினருக்கு தண்ணி காட்டும் மக்னா யானை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment