கடந்த 2019ம் ஆண்டு ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் துருவ் விக்ரம்.
அதன்பிறகு தனது தந்தை விக்ரமுடன் இணைந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் நடித்தார் துருவ்.
அதனை தொடர்ந்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கபடி விளையாட்டை மைய கதையாக கொண்ட படத்தில் துருவ் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (மே 6) இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த படத்திற்கு “பைசன்- காளமாடன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், துருவ் கட்டுமஸ்தான உடலுடன் கபடி விளையாட ரெடியாவது போல் போஸ் கொடுக்க அவருக்கு பின்னால் ஒரு பெரிய காளை மாட்டின் சிலை இருப்பது போல் போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், “கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்…” என்று பதிவிட்டுள்ளார்.
மாமன்னன் படத்தின் வெற்றிக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்ற படம் உருவானது. அந்த படம் எப்போது வெளியாகும் என்று இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ள நிலையில், தற்போது பைசன் படத்தின் அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிளஸ் 2 தேர்வு முடிவு: எந்த மாவட்டம் முதலிடம்?
செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கு: மே 15-க்கு ஒத்திவைப்பு!
சென்னையில் சிறுமியை கடித்துக் குதறிய நாய்கள்: உரிமையாளர் கைது!
மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா Vs பாகிஸ்தான் ஆட்டம் எப்போது?