மாமன்னன் படம் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜுக்கு கார் பரிசளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடித்த கடைசி படம் மாமன்னன். கர்ணன், பரியேறும் பெருமாள் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் மாமன்னன்.
உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியாகி பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் நாள் ரூ.8 கோடி வரை வசூலித்துள்ளது
இந்நிலையில் மாமன்னனை இயக்கிய மாரி செல்வராஜுக்கு கார் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
இதுகுறித்து இன்று (ஜூலை 2) உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள்.
உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி.
ரெட்ஜெயண்ட் நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னன்’-க்கு றெக்கை அளித்த மாரி செல்வராஜுக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
பிரியா
தங்கத்துக்கு டஃப் கொடுக்கும் தக்காளி!
விழாக்கோலம் பூண்ட நெல்லை : ஆனி தேரோட்டம் கோலாகலம்!