“மாமன்னன் படம் விமர்சனங்களுக்கு பதில் சொல்லும்” – மாரி செல்வராஜ்

சினிமா

மாமன்னன் திரைப்படம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும் என்று இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடித்த மாமன்னன் திரைப்படம் இன்று (ஜூன் 29) தமிழகம் முழுவதும் வெளியானது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் பேசியபோது, “தேவர் மகன் திரைப்படம் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தையும் மனப்பிறழ்வுகளையும் ஏற்படுத்தியது. அப்படத்தின் இசக்கி கதாபாத்திரத்தை தான் மாமன்னன் திரைப்படத்தில் வடிவேலு கதாபாத்திரமாக உருவாக்கியிருக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

தேவர் மகன் திரைப்படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளானது. மாமன்னன் திரைப்படத்தை வெளியிட்டால் தேவர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கிடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மணிகண்டன் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள். திரைப்படம் என்பது மக்கள் பார்க்கவே. இரண்டு நாள்களில் அதனை மறந்து விடுவார்கள். பேச்சுரிமை கருத்துரிமை அனைவருக்கும் உள்ளது என்று தெரிவித்தனர்.

மாமன்னன் திரைப்படத்தை வெளியிட்டால் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என்று ஃபார்வர்டு பிளாக், மருது சேனை கட்சிகள் தெரிவித்திருந்தன.

இந்தசூழலில் தமிழகம் முழுவதும் இன்று மாமன்னன் திரைப்படம் வெளியானது. சென்னை காசி திரையரங்கில் மாமன்னன் திரைப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் பார்க்க சென்றார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாரி செல்வராஜ், “மாமன்னன் படம் உருவாக காரணமாக இருந்த உதயநிதி ஸ்டாலின் சாருக்கு நன்றி. என்னுடைய எமோஷனல் தான் இந்த படம். மாமன்னன் படம் அதன் நோக்கத்தையும் தேவையும் நிச்சயமாக நிறைவேற்றும்” என்றார்.

மாமன்னன் திரைப்படத்தை வெளியிட்டால் திரையரங்கு முன்பு போராட்டம் நடத்துவோம் என சில அமைப்புகள் தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மாரி செல்வராஜ், “மாமன்னன் திரைப்படம் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

தக்காளி விலை குறைந்தது: எவ்வளவு தெரியுமா?

ஆஸ்கர் குழுவில் மணிரத்னம்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *