மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிகு ஜிகு ரயில் பாடல் நாளை வெளியாக உள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தலித் வாழ்வியலையும் அவர்களுடைய பிரச்சனைகளையும் தன்னுடைய திரைப்படங்களில் மாரி செல்வராஜ் தொடர்ந்து பேசி வருகிறார்.
அந்தவகையில் மாமன்னன் திரைப்படத்திலும் தலித் மக்களின் பிரச்சனைகளை பேசியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் மாமன்னன் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைக்கிறார். முன்னதாக இப்படத்தில் இடம்பெற்ற வடிவேலு பாடிய ராசா கண்ணு பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில் மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜிகு ஜிகு ரயில் பாடல் நாளை வெளியாக உள்ளது.
இதுகுறித்து இசையமப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏ நண்பா…ஏலே நண்பா…நீ தெம்பா… ஏறு நண்பா…ஜிகு ஜிகு ரயில்” என்று பதிவிட்டுள்ளார்.
செல்வம்
அமைச்சர் மஸ்தான் தம்பியின் பதவி பறிப்பு!
புதிய நாடாளுமன்றம்: மோடி வெளியிட்ட வீடியோ!