மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி?

Published On:

| By Selvam

mari selvaraj direct rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு வேட்டையன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் வேட்டையன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. வேட்டையன் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. தலைவர் 171 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 172 படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கப் போகிறார் என்று சொல்லப்படுகிறது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என தொடர்ந்து மூன்று  ஹிட் படங்களை கொடுத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அதன் பிறகு நடிகர் தனுஷூடன் மாரி செல்வராஜ் மீண்டும் இணையப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மாரி செல்வராஜ் தனுஷ் படத்தை முடித்த பிறகு நடிகர் ரஜினிகாந்தின் தலைவர் 172 படத்தை இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மாரி செல்வராஜ் ரஜினி கூட்டணியில் உருவாக இருக்கும் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்க இருப்பதாகவும், இந்த படத்தின் அறிவிப்பு தலைவர் 171 படம் முடிந்த பிறகு வெளியாகும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், மீண்டும் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2  படத்தில் ரஜினிகாந்த் நடிக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜூக்கு பிறகு தலைவர் 173 படத்தை நெல்சன் இயக்க வாய்ப்புள்ளது. மேலும், ரஜினியின் படங்களை இயக்கும் ரேஸில் இயக்குனர் அட்லீயும் இருக்கிறார் என்று குறிப்பிடத்தக்கது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பில்கிஸ் பானு வழக்கு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

சிவகாசி காலண்டர்கள் விற்பனை ரூ.350 கோடி: மக்களவைத் தேர்தலால் 10% உயர்வு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share