பாரதி ராஜாவின் மார்கழி திங்கள்: கவனம் ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக்!

சினிமா

திரைப்படங்களுக்கு பெயர் வைப்பதிலும், விளம்பரங்களிலும் தமிழ் அருகி வருகிறது. பொழப்புக்கு தமிழ் படம் வேண்டும் ஆனால் அதற்கான பெயருக்கும், அதனை விளம்பரப்படுத்தவும் ஆங்கிலத்தை பயன்படுத்துவதை தமிழ் திரைப்பட இயக்குநர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதனையும் கடந்து சில இயக்குநர்கள் சுத்த தமிழில் படத்திற்கு தலைப்பு வைப்பதும் நடக்கிறது. 1999 ஆம் ஆண்டு ரஹ்மான், விந்தியா, மணிவண்ணன், விஜயகுமார் நடிப்பில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான படம் சங்கமம்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நகரம் முதல் கிராமம் வரை ஹிட்டடித்தது. இந்தப் படத்தில் இடம்பெற்ற” மார்கழி திங்கள் அல்லவோ” பாடலுக்கு கதாநாயகி விந்தியா நாட்டியம் ஆடியிருப்பார். இந்தப்பாடல் திரையில் ஓடுகிறபோது முதலில் அரங்கம் நிசப்தமாகி பின்னர் கைதட்டல்களால் அரங்கம் அதிரும்.

அந்தப் பாடலின் முதல் இரண்டு வார்த்தைகளை மனோஜ் பாரதிராஜா தான் இயக்கும் முதல் படத்திற்கு ‘மார்கழி திங்கள்’என பெயர் வைத்துள்ளார்.

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார்.

புதுமுகங்களைக் கொண்டு உருவாகும் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ‘மார்கழி திங்கள்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் முதல் பார்வையை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார்.

முதல் பார்வையை பொறுத்தவரை கிராமத்து கதைக்களத்தில் படம் உருவாக உள்ளதையும், காதல் கதையாக இருக்கும் எனவும் தெரிகிறது.

பாரதிராஜா கையில் ஊன்றுகோலுடன் நின்றிருக்கும்படியான முதல் பார்வை கவனம் பெற்றுள்ளது. தலைப்பை தூய தமிழில் வைத்த தயாரிப்பாளரும், இயக்குநரும் முதல் பார்வை போஸ்டரில் தலைப்பை தவிர மற்ற அனைத்து விபரங்களுக்கும் ஆங்கிலத்தை பயன்படுத்தியது ஏன் என்ற கேள்வி எழுகிறது.

ராமானுஜம்

அதிமுக செயற்குழு கூட்டமும் ரத்து!

அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை: அரசு கவனிக்குமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *